Miles to go before I sleep...

Tuesday, September 06, 2005

குட்டியம் - 1

அமெரிக்கா வந்ததுனால என்னோட சொந்த ஊர் குட்டியம் க்கு நிறைய recognition கிடைச்சு இருக்குனு நினைக்கிறேன். அது என்னெமோ தெரியல, என்னோட last name பார்த்து நீ mallu va? அப்படினு தான் கேக்கறாங்க. "இல்லை, கேரளால இருக்கறது கோட்டயம், குட்டியம் வந்து ஆற்காடு பக்கத்துல இருக்கிற ஊருனு எல்லார்க்கிட்டயும் சொல்லனும். சொந்த ஊருனு சொன்னா, எங்கப்பா தான் அங்கே பொறந்தா அங்கே தான் junior school வரைக்கும் படிச்சா. அவ்வளோ தான் எங்க குடும்பத்துக்கும் குட்டியம் என்கிற ஊருக்கும் இருக்கிற உறவு. எங்க தாத்தாவோட அண்ணா அங்கேயே தான் இருந்தார் போற வரைக்கும். நான் இது வரைக்கும் ஒரு நாலு அஞ்சு வரைக்கும் எங்க ஊருக்கு போய் இருப்பேன். வருஷா வருஷம் இராம நவமி முடிஞ்ச அடுத்த வாரம் அங்கே இருக்கிற ஆஞ்சநேயர் கோவில்ல இலக்க்ஷார்ச்சனை நடக்கும். அந்த கிராமத்துல இன்னும் இருக்கிற ஒரே பிராமண குடும்பம் எங்களதுனு என் அப்பா, சித்தப்பா தான் நடத்தி வைப்பா.

சின்ன வயசுல எல்லாம், அதாவது ஒரு 5th standard படிக்கும் வயசுல எல்லாம் நானும் என்னோட cousinsum எப்போடா ஏப்ரல் வரும்னு காத்துண்டு இருப்போம். அப்போ எல்லாம் அது ஒரு பெரிய trip plan மாதிரி. இரண்டு matador van வாடகைக்கு எடுத்து ஒரு 30 பேரு சென்னையிலிருந்து கிளம்புவோம். என்னோட அப்பா side'la எனக்கு இரண்டு அத்தை, இரண்டு சித்தப்பா. அதை தவிர பெரிய தாத்தாவோட பசங்க and அந்த cousins வேற இருப்பாங்க, so எங்களோட cousins பட்டாளமே ஒரு 12 பேரு இருப்போம்.எல்லோரும் சேர்ந்து ஏதாவது விளையாடிட்டு, சண்டை போட்டிக்கிட்டு போவோம்.

போனவுடன் சம்ம சாப்பாடு கிடைக்கும். அப்பாவோட போனா அங்கே இருக்கிற main தெருல (இங்கே lexington downtown Main Street மாதிரி) எல்லாரோட வீட்டுக்கும் போய்ட்டு வருவேன். எல்லாரும் அதே கேள்வி தான் கேப்பாங்க - " என்னடா எத்தனாவது படிக்குற?, 5th standard போறியா இல்லை படிக்கிறயா?, ஒழுங்கா படிக்கிறயா? எத்தனாவது rank வாங்குற? (யோவ், இதை இப்போ அவசியமா கேக்கணுமானு தோணும்!). எங்கப்பா ஒரு வேடிக்கையான உண்மை சொல்லுவார் - "இந்த் ஊருல நமக்கு தெரிஞ்சவாளே அஞ்சாரு பேரு தான், ஆனா கோவில்ல நவக்கிரஹம் மாதிரி ஒருத்தர ஒருத்தர் பார்த்துக்க மாட்டா, அவ்வளோ politics இங்கேயும்."!!

- Part 2 Soon!




7 Comments:

Anonymous Anonymous said...

Your blog is creative Keep up the great work. Don't miss visiting this site about how to buy & sell everything, like bowling ball on interest free credit; pay whenever you want.

12:15 AM  
Blogger The Doodler said...

Hmm..Prabhu, kalakkara po. Childhood vacation memories are the sweetest..nostalgic post. Waiting for part 2.

11:39 AM  
Blogger rajesh said...

ksp...
yedhuku ellarum kuttiyam naa kerala nu associate panra theryumaa?
nee nekaraa maari kottayam link laam illa :p

its bcos of kerala pen "kutty"am... :))

6:15 PM  
Blogger Prabhu said...

subha - i concur, childhood vacation times are very sweet and memorable.

rapi - etho link aana nee malu va kelvi mattum neraiya kekkaraanga!

1:01 PM  
Blogger P B said...

venkat - vasu phone: Vasu vantha puthusil.

venkat: Hello Kuttiyam irukana?
vasu: (confused) Yaro malayathula pesuranga..yaruku malayalam therium..enaku therium aana avan kekkarathu puriyala!

marakave mudiyathu da!

5:44 PM  
Anonymous Anonymous said...

hi prabhu,
this is manni...
enna bayanagara biography ellam eluthare....

10:45 PM  
Anonymous Anonymous said...

prabhu,
manni here..(srinidhi).
enna biography ellam eludhara??
en perum konjam sethu eludhu.
catch u later
byee

10:46 PM  

Post a Comment

<< Home