Miles to go before I sleep...

Thursday, September 08, 2005

குட்டியம் - 2

குட்டியம் ஏதும் வழக்கமான சினிமால வரா மாதிரி பச்சைப்பசேல்னு இருக்காது. நிறைய காய்ஞ்சுப் போன பூமி, தண்ணி வராத பம்புசெட், அழுக்கான ஏரி, பரட்டைத் தலை மக்கள், ஆங்காங்கே கொஞ்சம் vegetation அவ்ளோ தான். எங்க பெரிய தாத்தாவோட வீட்டுல மட்டும் தான் restroom எனப்படும் கழிப்பிடம் இருக்கும். அதுவும் நாங்க use பண்ணமுடியாது, பொம்மனாட்டிகளுக்கு மட்டும் தான். அந்த ஊருக்கு போனாலே poverty struck land என்கிற நினைப்பு வரும்.

அங்கே வாழற மக்களுக்கு நாங்க வர time தான் தீபாவளி மாதிரி. அவங்க முகத்துல ஒரு ஏக்கம் இருக்கும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக்கனும் என்கிற ஆசை, "வாங்க சாமி" னு கூப்பிடற மரியாதை (ஒரு வேளை complex'aa கூட இருக்கலாம்). The conversations usually goes like - " என்னப்பா, எப்படி இருக்க?, சரி இதை கைச்செலவுக்கு வச்சுக்க, இது கொஞ்சம் பழைய துணி இதையும் எடுத்துக்க".
" ரொம்ப நன்றிங்க சாமியோவ்! ஏலேய், சாமிக்கு கொஞ்சம் இளநீர் பறிச்சு போடுங்க...... போயிட்டு வாங்க ஐயா".

அந்த கோவில் திருவிழா கூட வருஷம் ஆக ஆக commercial ஆக்கிட்டாங்க. 7th standard படிக்கும் போது போனப்ப - TV, VCR எல்லாம் வாடகைக்கு எடுத்து விடிய விடிய சினிமா படம் போட்டாங்க. சும்மா ஒப்புக்கு ஒரு சாமி படம் போட்டுட்டு அப்புறமா நல்ல mass படமா போட ஆரம்பிச்சாங்க. எனக்கு தெரிஞ்சு என்னோட முதல் night-out அது தான். So வர வர எல்லாத்தலையும் மசாலா தேவைப்படுது.

அப்போ எல்லாம் ஏதோ சொந்த ஊருக்கு போறோம் என்கிற நினைப்பை விட இரண்டு நாள் ஜாலியா இருக்கலாம்னு எண்ணம் தான் மேலோங்கும். பூஜை எல்லாம் முடிச்சு, பிரசாதம் எடுத்துண்டு, வீட்டுக்கு திரும்பி போற வழில அப்பா படிச்ச schoolனு ஒரு பாழடைஞ்ச கட்டடத்தை பார்த்துட்டு வீடு திரும்புவோம். என்ன இருந்தாலும் அந்த மண்ண விட்டு சென்னைக்கு திரும்பும் போது மனசு கொஞ்சம் கனக்கத்தான் செய்யும்.

அது தான் சொந்த மண் சொந்த இரத்தத்தோட சக்தியோ?

- முற்றும்

2 Comments:

Anonymous Anonymous said...

ennada prabhu.. ratham adhu idhu oru peruya puratchi panna madhiri solriye..
-vv

6:49 PM  
Anonymous Anonymous said...

nattamai thirpai mathi sollu

11:50 PM  

Post a Comment

<< Home