எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவாரோ ....Where do you go? வைகோ!
கடந்த சில வாரங்களாகவே தமிழக அரசியல் சூடு அனல் பறக்க ஆரம்பித்திருக்கிறது. முக்கியமாக வைகோ திமுக அணி /அதிமுக அணி எந்த பக்கம் சாய்வார் என பல தரப்பட்ட யூகங்களும், அழைப்புகளும் வந்த வண்ணம் உள்ளன. இதில் அடியேனின் கருத்துக்களும், வைகோ எந்த பக்கம் சென்றடைவார் என்கிற யூகமும் சொல்ல விருப்பப்பட்டேன்.
ஏன் மதிமுக வெளியே செல்ல துடிக்கிறது??
1. இட ஒதிக்கீடு பிரச்சனை:
திமுக அணியில் - திமுக, காங்கிரஸ், பாமக ஒட்டு வங்கிக்கு அடுத்தபடி இருப்பது மதிமுக என ஒரு தோற்றம் இருக்கிறது. பாமக வை பெரிய கட்சி ஆக ஏற்றுக்கொள்ள என்னால் முடியவில்லை - ஆண்டவன் புண்ணியத்தில் இந்த election' ஒரு 5 சீட் வெற்றியை குடுத்து ஓரமா உக்கார வைக்கனும், ரொம்ப ஆடராங்கப்பா ஆனாலும். காங்கிரஸ் எதைக்குடுத்தாலும் வாங்கி கொள்ளும் (central government இருக்கே!) அதுனால் அதுக்கு 40-45, பாமக விற்கு 25-30 (21 sitting MLA's இருக்கு பாமக, so 25 மினிமம் குடுத்தாகவேண்டும்), கம்யூனிஸ்ட் சேர்த்து 16 இடங்கள் மினிமம். இதில் திமுக தனியாக ஆட்சி பிடிக்க வேற நினைக்கிறது - ஸ்டாலின் முடி சூடிக்கொள்ள அது தானே வசதி. ஆதலால் மதிமுக க்கு மிஞ்சி போனால் 18-20 இடங்கள் குடுப்பார்கள். இதை விட நிறைய இடங்கள் மதிமுகவிற்கு கிடைத்தால் திமுக தனி ஆட்சி, பரண்ல போட வேண்டியது தான்.
2. மீடியா இருட்டடிப்பு:
நிஜமாகவே சன் டிவி செய்திகள் - அவ்வளவு ஒரு தலை பட்சமாக இருப்பதை தினமும் கண் கூடாக பார்க்க முடிகிறது. தினமும் அரசுக்கு எதிராக பல complaints - "அரசின் இயலாமையால் இது முடியவில்லை, அது முடியவில்லை" எனத்தான் தலைப்பு வசவுகள் இருக்கின்றன. இதில் இப்போது "சும்மா நச் னு இருக்கு தமிழ் முரசு" மாலை நாளிதழ் வேறு, அதையே print media விலும் கொண்டு செல்கிறது. திமுக-சன்::அதிமுக-ஜெயா மாதிரி மதிமுக விற்கு ஒரு டிவியும் இல்லை, பத்திரிக்கையும் இல்லை. அதனால் சுத்தமாக மதிமுக பற்றி செய்திகள் வருவதே இல்லை. எந்த கட்சி தொண்டனாக இருந்தாலும், வருடா வருடமாக தோற்க நினைப்பதில்லை. வெற்றி பெற்று, மக்கள் சேவை செய்ய முடியாவிட்டாலும், வீட்டு சேவையாவது செய்ய நினைப்பது தவறில்லை. அதைத்தான் இப்போது மதிமுக தொண்டனும் வேண்டுகிறான். பழுத்த அரசியல்வாதியான வைகோ விற்கு அது தெரியாமல் இல்லை. அது தான் அதிமுக செய்த அவமானங்களை மன்னிக்க துணிந்து விட்டார். அதுவும் தனித்து நிற்கும் அதிமுக விடம் சேர்ந்தால் குறைந்த பட்சம் 40 இடங்கள் கிடைக்க வாய்ப்புண்டு.
மதிமுக ஜெயாவிடம் போனால் ஏற்படக்கூடிய நெருடல்கள்:
1. தடை போடுகின்ற தடா:
வைகோ-வை தடா சட்டத்தின் கீழ் 18 மாதங்கள் சிறையில் அடைத்தது ஜெயா அரசு தான் என்பது தமிழகத்தில் அனைவருக்கும் தெரியும். கீரியும் பாம்பும் போல் இருந்து இப்போது கைக்கோர்த்துக் கொண்டால் எதிர்க்கட்சிகளுக்கு அதுவே ஒரு easy talking point for the elections ஆகி விடும். (என்ன தான் இப்போ காளிமுத்து, central government law அது நாங்க போட்டது இல்லை ன்னு comedy அடிச்சாலும்!)
2. ஜெயாவின் history of alliances:
அதிமுகவை பொருத்த வரை ஜெயா வில் ஆரம்பித்து லலிதா வில் முடிந்து விடும் கட்சி ஒன்று. அங்கு வைகோ வை எப்படி நடத்துவார்கள் என்பது ஒரு தன்மான கேள்வி. Basically, one should be ready for all kind of insults. தேர்தலில் வெற்றி பெற்றால் - ஜெயா அலை, தோற்றால் - எதிர்க்கட்சிகள் போலி வாக்கு போட்டு வெற்றி. மதிப்பும் மரியாதையும் அளவு சாப்பாடு மாதிரி அளவாகத்தான் கிடைக்கும். ஆனால் அதிமுக வின் வோட்டு வங்கி எல்லா தொகுதியிலும் இருப்பதால், MDMK can expect to win more than if contesting alone.
தொண்டனின் குரல் கேட்பாரா? அல்லது மனசாட்சி யின் குரல் கேட்பாரா?
எப்படி முடிவு எடுத்தாலும் - வைகோ ஒரளவுக்கு clean image ஒட இருக்கும் அரசியல்வாதி என்கிற நினைப்பு மக்களிடம் இருந்தால் அடுத்த election he will be a major force to reckon with.
Vaiko - my heart tells me you should go with the ADMK front - she has definitely done some good in the recent past and after all - there are no permanent enemies in politics!